தனக்கென ஒரு வழியை அமைத்துக் கொண்டு எவன் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாகப் போய்க் கொண்டு இருக்கிறது சிவகார்த்திகேயனது எக்ஸ்பிரஸ். அவர் நடித்துள்ள சீமராஜா செப்டம்பர் 13 ம் தேதி ரிலீஸ்.
இது போக கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம்,ராஜேஷ் .எம். இயக்கத்தில் மற்றொரு படம் என ரெடி ஆகிக்கொண்டிருக்கிறது.
இவைகளுக்கு மத்தியில் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பான கனா வை அவரது நண்பர் அருண் காமராஜ் இயக்கி வருகிறார். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இந்த படக்கதை கிரிக்கெட்டைப் பின்னணியாகக் கொண்டது . வருகிற 23ம் தேதி இசை வெளியீட்டு விழா. கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி வந்தனா கலந்து கொள்கிறார் என்பது சிறப்பு சேதி.