நூறு ரூபாய்க்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்து விட்டு ஒவ்வொரு நோட்டுப் புத்தக அட்டையிலும் தனது படத்தை ஒட்டிக் கொடுக்கும் நடிகர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நடிகர்ங்க! விவரமா சொல்லாம மொட்டையா சொன்னா எப்படி?
அதாவது சுஷாந்த் சிங்.பாலிவுட் நடிகர். கேரளப் பெருவெள்ளம் நாட்டையே உலுக்கி எடுத்திருக்கிற போது பாலிவுட்டை மட்டும்விட்டு வைத்திருக்குமா? ஒரு ரசிகர் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.
” என்னிடம் காசு இல்லை. ஆனால் சிலருக்காவது உதவி செய்யனும்னு ஆசைப் படுறேன். எப்படி உதவுவது ,வழி சொல்லுங்களேன்?” என கேட்டிருந்தான்.
“கவலைப் படாதே! உன்னுடைய பெயரில் கேரள மக்களுக்கு ஒரு கோடி அனுப்பி விடுகிறேன்.” என்று தன்னுடைய கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு காசோலை அனுப்பி இருக்கிறார். உண்மையான இந்தியன் இந்த மனிதருக்குள் இருக்கிறான். வாழ்க சுஷாந்த் சிங் ரஜ்புட்!