முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றிய படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் எடுக்கவிருப்பதும் அதை ஏஎல்.விஜய் இயக்கப்போவதும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவை .
நட்சத்திரத் தேர்வு மற்றும்இதர டெக்னிசியன்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அண்மையில் சென்னையில் நடந்த ‘லட்சுமி ‘ பட செய்தியாளர்கள் கூட்டத்தில் அதைப் பற்றி விஜய்யிடம் நான் கேட்டபோது “அடுத்த வருஷம்தான் ஆரம்பிக்க வேண்டும்” என திட்ட வட்டமுடன் சொன்னார்.
ஆனால் ஆந்திராவில் புதிதாக ஒரு செய்தி பரவி இருக்கிறது. அது உண்மையா கிளப்பலா என்பது தொடர்புடையவர்களுக்கு மட்டுமே தெரியும். இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் ‘ஜெ’ வாழ்க்கையை படமாக்கப் போகிறார் என்பதாக சொல்கிறார்கள்
. இன்னும் ஒரு படி மேலே சென்று “ஐஸ்வர்யா பச்சன், ஸ்வீட்டி அனுஷ்கா ஆகியோரிடம் பாரதிராஜா பேசி இருக்கிறார். இன்னும் முடிவு தெரியவில்லை”என்பதாகச் சொல்கிறார்கள். இதில் வேடிக்கை என்வென்றால் பிரியதர்ஷனும் எடுக்கப்போகிறார் என்கிற செய்திதான்!
விஜய்க்கு தயாரிப்பாளர் இருக்கிறார். அவரே அறிவிப்பும் செய்தார்.ஆனால் பின்னவர் இருவர்க்கும் யார் தயாரிப்பாளர் என்பதே தெரியவில்லை. வேடிக்கைதான்!