நான் இனியும் மகத் காதலி கிடையாது.! குமுறிய பிராச்சி! வைரலாகும் வீடியோ
பிக் பாஸ் 2 வீட்டிற்குள் நுழைந்துள்ள மகத் முன்னாள் இந்திய அழகியும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு யாஷிகா மீதும் காதல் ஏற்பட்டுள்ளது.கமல் மூலம் தெரியவந்துள்ளது.
மகத் யாஷிகாவிடம் தன் காதலை சொன்னதை பார்த்த பிராச்சி, பொங்கி எழுந்துள்ள பிராச்சி மகத்தின் காதலுக்கு குட்பை சொல்லியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்பு மகத் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிராச்சி. பிராச்சியை பிரிந்து 3 மாதம் எப்படித் தான் இருக்கப் போகிறேனோ என்று காதல் பொங்க பேசியுள்ள. மகத், தற்போது இல்லை, மாறிவிட்டார் என்கிறார் பிராச்சி. நான் காதலித்த ஒருவரை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். பிக் பாஸ் டைமிங்கிற்கு ஏற்ப எங்கள் வாழ்க்கையை திட்டமிட்டோம். அவர் என்னை காதலித்தார். நான் அவரை இன்னும் காதலிக்கிறேன். நான் இனியும் அவர் காதலி கிடையாது. ஆனால் அவரை நேரில் சந்தித்து அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசுவேன். அவர் யாஷிகாவை காதலிப்பது தற்போது தெரிந்துவிட்டது.நான் வேதனையில் உள்ளேன். ஆனால் இதனால் என் வாழ்க்கை மாறிவிடாது. என்னை பார்த்துக் கொள்ள தெரியும்.அவரை பற்றி இனி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இது என் தனிப்பட்ட வாழ்க்கை, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் பிராச்சி.தற்போது பிராச்சி வெளியீட வீடியோவை அவரே நீக்கியுள்ளார்.