சசிகலா அக்காள் மகன் தினகரன்அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.இவரது கட்சியில் இன்று காலை ‘மன்மதராசா’ புகழ் பிரபல இசையமைப்பாளர் தினா,சென்னையில் உள்ள தினகரன் வீட்டுக்கு சென்றார்.அங்கு தினகரனை சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து அவரது கட்சியில் இணைந்தார்.அப்போது காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ம.கரிகாலன் B.E., உடனிருந்தார்.அமமுக கட்சிக்காக இசையமைப்பாளர் தினா பாடல்கள் இசையமைத்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.