தனது கலலூரித் தோழனும் நெருப்புடா பாடல் மூலம் பிரபலமான அருண்ராஜா காமராஜா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள கனா படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.தில் அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர்.பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தனது செல்ல மகள் ஆராதனாவுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார்.சிவகார்த்திகேயனின் இன்னொரு கல்லூரித் தோழரான திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புப் பணிகளும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி ’கனா’ படத்தின் இசை மற்றும் டீஸரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இசையை வெளியிடுகிறார்.