பொதுவாக,”v” என்கிற எழுத்தை முதல் எழுத்தாக வைத்துதான் அஜித் படத் தலைப்புகள் அமையும், அதே போல் பர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள், படம் ரீலீஸ் என எதுவாக இருந்தாலும் அது வியாழக்கிழமையில் தான் நடைபெறும்..இந்நிலையில்,விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அதிகாலை 3.40 மணியளவில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் அஜித் இரட்டை வேடம் என சொல்லப்பட்டு வந்தது தற்போது உறுதியாகிவிட்டது.இப்படம், பொங்கலுக்கு வெளியாகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்ட்ரில் அவர் ஒரு அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கி வயதான தோற்றத்தில் இருக்கிறார்.இன்னொரு அஜித் இளமையான தோற்றத்தில் இருக்கிறார்.ஒரு பக்கம் கிராமம். இன்னொரு பக்கம் நகரம் என இரண்டையும் மையப்படுத்தி கதை இருக்கும் என யூகிக்கப்படுகிறது. வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிரண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.அஜித்தின் விசுவாசம் படம் வரும் ஜனவரி 2019 பொங்கலுக்கு வரும் என்பதும் உறுதியாகிவிட்டது.