எந்த ஜென்மத்துப் புண்ணியமோ விதார்த்துக்கு இப்படி ஒரு வாய்ப்பு. காற்றின் மொழி படத்தில் திருமதி ஜோதிகாவுக்கு கணவராக நடித்திருக்கிறார், ராதா மோகன் இயக்கம் என்றால் தரத்துக்கு கியாரண்டி! அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது .
மொழியில் ஊமையாக கண்களாலும் செய்கையாலும் நடித்து அசத்திய ஜோதிகா “காற்றின் மொழி”யில் அதற்கு நேர் மாறான வாயாடி ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்,
விதார்த் கூறுகையில் ” ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கிறேன் .கணவன் மனைவிக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை .இது மாதிரியான கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. அழகான ,அன்பான கணவராக நடித்துள்ளேன். விதார்த் நல்ல நடிகன் என்று இந்த குடும்பப்பாங்கான கதை எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கண்டிப்பாக கொடுக்கும். ” என்றார்.
லட்சுமி மஞ்சு மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமாக நடிக்க, சிம்பு “காற்றின் மொழி”யில் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார் . குமாரவேல் , பாஸ்கர் ,மனோபாலா ,மோகன் ராமன் , மற்றும் பலர் நடித்துள்ளனர் .மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவை செய்து காஷிஃப் இசையமைதுள்ளார் . பாப்ட்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் டு க்காக .தனஞ்ஜயன் ,.விக்ரம் குமார், மற்றும் லலிதா தனஞ்ஜயன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.