“மார்புக்கு மத்தியிலே மரணித்தாலும் சொர்க்கம்தான்!” என்று சும்மாவே புலம்புவார்கள் .படத்துக்குப் பேரே ’24 கிஸ்சஸ்’ .ஆதித் தருண், ஹெபாப் படேல் . இளம் ஜோடி .ஆதித் தருணை ஒரு வகையில் பெண் பித்தன் என்றே சொல்லலாம்.
இவரைத்தான் ஹெபாப் லவ் பண்ணுகிறார் .தருணை பிடித்திருக்கிறது. ஆனால் நட்பு நீடித்ததாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். நாயகனோ கொஞ்ச காலத்துக்கு கொஞ்சிவிட்டு கழட்டி விட்டு விடலாம் என நினைக்கிறார் போல.!
ஆனால் லிப் லாக்கில் எத்தனை வகைகள் இருக்குமோ அத்தனை வகையையும் அந்த இளம் பெண்ணின் உதடுகளில் மேய்ந்து பார்த்து விடுகிறார், கீழ்உதடு ,மேல் உதடு என பார்க்காமல்.! தணிக்கைக் குழுவினர் எந்த மனநிலையில் பார்த்தார்களோ டிரெய்லரை தாராளமாக அனுமதித்திருக்கிறார்கள் .அக்கட தேசத்துக்கு இருக்கிற ஆசை, உணர்ச்சி எல்லாம் நமக்கு இருக்காதா?