குறைந்தது முக்கால் டஜன் பேராவது தன்னை “அனுபவித்திருப்பார்கள்” என்று சொல்லி இருப்பார் ஸ்ரீ ரெட்டி.
மான அவமானங்களுக்குப் பயந்த சிலர் பணத்தைக் கொடுத்து சரிக்கட்டி இருப்பதாகத் தெரிகிறது. தன்னைக் கெடுத்தவர்கள் லிஸ்ட்டில் இருத்து அந்தப் பெயரைத் தூக்கிவிட்டு அந்த காலி இடத்தில் யாருடைய பெயரை சேர்க்கலாம் என யோசித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கிற ஸ்ரீ ரெட்டி தனது பெயரில் படம் எடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார். தயாரிப்பாளர், இயக்குநர் பெயர்கள் புதிதாகத் தெரிகிறது.
ஸ்ரீ ரெட்டியைப் பற்றி தற்போது பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் கருத்துத் தெரிவித்திருக்கிறார், “தப்புப் பண்ணிட்டு இப்படி பகிரங்கமா சொல்லிட்டுத் திரியிறது நல்லது இல்லை.எல்லாத் துறைகளிலுமே செக்ஸ் டார்ச்சர் இருக்கவே செய்கிறது. அதை ஏத்துக்கொள்வதோ , மறுப்பதோ நம் கையில்தானே இருக்கு? போய்யா நீயுமாச்சு வாய்ப்புமாச்சுன்னு சொல்லிட்டு வந்திருக்க வேண்டியதுதானே?” என்கிறார் பிரியா பவானி சங்கர்.