தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத் தலைவர் கேப்டனுக்கு இன்று 66. அவர் குடியிருக்கிற சாலிகிராமம் பகுதியில் கண்ணம்மாள் தெருவில் தொண்டர்கள் குடும்பத்துடன் குவிந்து விட்டார்கள்.
ஆனாலும் வீடு கொள்ளாது என்பதால் அவர்களை கழக அலுவலகத்துக்கு வரும்படி சொல்லி விட்டார்கள். தனது குடும்பத்தவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்ற பின்னர் கேப்டன் டி.வி. பிரபலங்களை சந்தித்தார்,நெருங்கிய நண்பர்களையும் சந்தித்தார்,
கேப்டன் இன்று உற்சாகமாக இருந்தாலும் வெகு நேரம் அவரால் நிற்க இயலவில்லை. அமர்ந்தே இருந்தார்.வழக்கமான புன் சிரிப்பு அவ்வப்போது ! கட்சி அலுவலகத்துக்கு 11 மணி அளவில் புறப்பட்டுச் சென்றார். மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் உடன் சென்றனர்.
” அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து இறங்கியதும் நேராக வீட்டுக்குத்தான் செல்வார் என நினைத்தோம். ஆனால் நேராக கலைஞர் நினைவிடத்துக்குச் செல்லும்படி சொல்லி விட்டார்.அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர்தான் வீட்டுக்குச் சென்றோம். மறுபடியும் அமெரிக்க செல்ல வேண்டும். அங்கிருந்து தமிழகம் திரும்பும் போது நீங்கள் முன்னர் பார்த்த கேப்டனை பார்க்கலாம். பேசலாம். தமிழ்நாட்டுக்கு ஒரே தலைவர் கேப்டன் மட்டும்தான்!” என்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.