உலகநாயகன் கமல்ஹாசன், சரிகாவின் மகள்களில் மூத்தவர் ஸ்ருதிஹாசன். 32 வயதாகும் இந்தப் பெண்ணுக்கு அம்மாவுடன் நடிப்பதற்கு ஆசை,
“நாங்கள் இப்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறோம். அதை நானும் அம்மாவும் பார்த்துக்கிறோம். எனக்கு ஓர் ஆசை. அம்மாவுடன் நடிக்கவேண்டும். அப்பாவுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன்.ஆனால் அம்மாவுடன்தான் இன்னும் நடிக்கவில்லை!அந்த ஆசை நிறைவேறனும் “என்கிறார்.
“உங்க அப்பா அம்மா மாதிரி புகழ் பெறனும் என்கிற ஆசை இருக்கா?”
“அவங்களோடு என்னை கம்பேர் பண்ணக்கூடாது. அப்பா அம்மா இரண்டு பேருமே நாலு வயசிலேயே சினிமாவுக்கு வந்தவங்க, அவங்களவுக்கெல்லாம் சாதிக்க முடியாது. நான் அவங்களுக்குப் பெருமைத் தேடித்தரணும். அவங்களின் மகள் என்பதாலேயே நடிப்பிலே அவங்களை விட உயர்ந்து நிற்கணும் என்பதெல்லாம் இல்ல.இது என் வாழ்க்கை.” என்கிறார் ஸ்ருதிஹாசன்.