நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர், பொருளாளர் தேர்தல்.
மு.க. அழகிரியிடம் கருத்துக் கேட்டிருக்கிறார்கள் மதுரையில்!. கருணாநிதியினால் கழகத்தை விட்டே நீக்கப்பட்டிருப்பவர் அழகிரி.
அவரிடம் சென்று “ஸ்டாலினும் ,துரை. முருகனும் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டால் கோபம் வருமா வராதா?
“என்னைப் போய் வழி மொழியச் சொல்கிறீர்களா?” என்று பத்திரிகையாளர்களிடம் சினத்தைக் காட்டி விட்டார் அழகிரி.
“இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.ஆனால் இடைத் தேர்தலில் போட்டியிடுவோம்”என்று பதில் சொல்லி இருக்கிறார். நிச்சயம் திருவாரூர் தொகுதியில் அழகிரியே நிற்பார் என்கிறார்கள் ஆதரவாளர்கள்
. டி.டி.வி.தினகரனும் ஆதரவு தருவார் என நம்புகிறார்கள்.
போட்டியின்றி தேர்வாகும் அண்ணன் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார் கனிமொழி எம்,.பி.