“திராவிடம் தவிர்” என்பது சீமானின் இலக்கு.
‘நாம் தமிழர்’ என்பது சீமான் தலைமையிலான இயக்கம். இந்த இயக்கத்துக்காக கடுமையாக போரிடக்கூடியவர். திரைப்படம் என்பது அரசியலில் தீவிரம் காட்டுவதற்கு முன்னர் இவரது வாழ்வில் ஓர் அங்கமாக இருந்தது. ஆனால் அரசியலில் தீவிரம் காட்டத்தொடங்கிய பின்னர் திரை உலகம் தனித்து விடப்பட்டது. தற்போது தவம் என்கிற திரைப்படம் வழியாக கோடம்பாக்கம் வந்திருக்கிறது. அது அரசியல் சார்ந்த படமாகவே இருக்கும் என நம்பலாம். வரப்போகிற தேர்தல் களத்துக்கு ஆயத்த பணியாகவும் கருதலாம். திராவிடம் தவிர் என கழகங்களை விலக்குவதால் இவர் தனித்துப் போட்டியிடுவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.