“பொங்கலுக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கும்மா?” தலைப்பொங்கலுக்கு நாட்களை என்னும் மகள்…..
“தீவாளிக்கு எத்தனை நாள் இருக்குண்ணா?” அண்ணனை நச்சரிப்பான் தம்பி…..வெடிகள் புத்தாடை மயக்கம் அவனுக்கு!
“டிக்கெட் கன்பார்ம் ஆச்சான்னு பாருங்க. ஆர் ஏ சி ல இருக்குன்னு வந்திங்கன்னா கடுப்பா ஆகிடுவேன்” –கணவனை எச்சரிக்கும் புதுப் பொண்டாட்டி.
இவர்கள் எல்லோரையும் விட இந்த மாதத்தில் மொத்த குடும்பமே எதிர்பார்க்கிற ஜீவன்தான் “6௦ வயது மாநிறம்.”
“ரிசர்வேஷன் என்னிக்கின்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்ததுமே ரிசர்வேஷன் பண்ணிட்டு வரலே அன்னிக்கு நீங்க காய வேண்டியதுதான்!”என வீட்டம்மா எச்சரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் மொத்த எதிர்பார்ப்புமே அந்த படத்தின் மீதுதான்!