நடிப்பதே தொழில் என்றாகிப் போன நடிகர் நடிகைகளுக்கு சினிமாவில் நடிப்பதை விட பிக்பாசில் நடிப்பது சற்று கடினம். பின்னதில் ரீஷூட் பண்ண முடியாது. அதனால் அதிகமாகவே நடித்தாக வேண்டும். பிக்பாஷில் சாயிஷாவை காதலிப்பதாக மகத் கதை விட்டதும் ஒரு நடிப்புதான். ரெட் கார்டு வாங்கி வெளியில் போன ஆள் ஒரிஜினல் காதலி பிரச்சியுடன் இருக்கிற படங்களை வெளியிட்டு இவதான் என் உலகம் என்கிறார்.