“சுய் தாகா” படத்திற்காக மேக்கப் இல்லாமல் 20 நிமிடத்தில் படப்பிடிப்புக்கு தயாரான நடிகை அனுஷ்கா ஷர்மா !
வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர். தேசிய விருது இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.அனுஷ்காவின் கதாபாத்திரம் ஒரு எளிமையான பெண் தன் சொந்த தொழில் மூலமாக முன்னேறுகிறார் என்ற கருத்தினை கொண்டது.நடிகர் வருண் தவான் மௌஜி என்ற கதாபாத்திர பெயரிலும் ,அவருக்கு மனைவியாக மம்தா என்ற கதாபாத்திர பெயரில் அனுஷ்கா நடித்துள்ளார்.இப்படம் குறித்து அனுஷ்கா ஷர்மா கூறியதாவது,’இந்த படத்தின் ட்ரைலரை பார்த்தேன்.என் காதாபாத்திரத்தின் தோற்றம் மிகவும் அருமையாக இருந்தது.இதற்க்கு எல்லாம் காரணம் ஆடை வடிவமைப்பாளர் தர்சன் மற்றும் மேக்கப் கலைஞர்கள் தான்.மேக்கப் இல்லாமல் படப்பிடிப்பிற்கு தயாராக எனக்கு 20 நிமிடங்கள் தேவைப்பட்டது.”என்கிறார்.இப்படம்,செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.