“நடிகை உக்காந்த இடம்யா” என்று சொன்னால் போதும் ரசிகர்களுக்கு அந்த இடம்தான் மூலஸ்தானம். பூ போட்டு அர்ச்சனை பண்ண ஆரம்பித்து விடுவார்கள் .அந்த அளவுக்கு சினிமா நட்சத்திரங்கள் என்றால் ரசிகர்கள் வெறியாக நேசிக்கிறார்கள்.
அண்மையில் விஷாலின் இரும்புத்திரை வெற்றி விழாவுக்கு சென்னை வந்திருந்தார் சமந்தா. ஆந்திராவில் அமலாவுக்குப் போட்டி சமந்தாதான். மாமியார் சமூக சேவகி. தற்போது மருமகளும் சமூக சேவகி.
சென்னைக்கு வந்திருந்த சமந்தா அப்படியே ஜாம் பஜார் மார்க்கெட்டுக்குப் போய் ஒரு கடை போட்டு உட்கார்த்து காய்கறி விற்க ஆரம்பித்து விட்டார்,
சற்று நேரத்தில் எல்லா காய்கறிகளும் காலி.
இதில் என்ன வேடிக்கை என்றால் கூடுதலாகவே காசு கொடுத்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள். நடிகை வித்த காய் என்பதால் ருசி கூடிருச்சோ என்னவோ! ஆனால் அந்த பணத்தை சமூக சேவை அமைப்புக்கு கொடுத்து விட்டார், நல்ல காரியம்தான்.