செவனேன்னு கெடக்கிறாங்க ராசாக்கள் , சாமி வகையறாக்கள். அவங்களை குத்தி விடுற மாதிரி தலைப்பு வெச்சிருக்காங்களே , ராமர் பாலத்தை அனுமாரும் அணிலும்ல கட்டுனதா சொல்வாங்க…என்னய்யா புது வம்பா இருக்கு ?
“அதெல்லாம் இல்லிங்க.கர்ணன் மாரியப்பன், முருகேசன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராமர் பாலம்’. சமூக கண்ணோட்டத்துடன் கூடிய காதல் கதைதான்! புதுமுகங்கள் மது , நிகிதா ஜோடியாக நடிச்சிருக்கங்க.. “என்கிறார்கள் படக்குழுவினர்.
தயாரிப்பாளர்களில் ஒருவரான கர்ணன் மாரியப்பன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அடிப்படையில் டாக்டரான கர்ணன், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர். சினிமா மீதிருந்த ஆசையில் இயக்குனராக முடிவெடுத்து சென்னையில் செட்டிலாகிவிட்டார்.
ராமாயணத்தில் ராமர் சீதையின் மீது கொண்ட காதலால் ராமர் பாலம் உருவானது.. அதேபோல தண்ணீர் நிறைந்து ஓடும் ஆற்றங்கரையில் உள்ள இரண்டு ஊர்களுக்கு இடையே பாலம் கட்ட நினைக்கிறார்கள் ஊர்மக்கள்.. ஆனால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என முறையிட்டும் அது நடக்கவில்லை.. ஆனால் ஒரு காதல் காரணமாக அந்த ஊருக்கு பாலம் வருகிறது.. அது எப்படி என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நீண்டநாளாக இப்படி ஒரு பாலம் கட்டப்பட வேண்டும் என்பது அந்தப்பகுதியில் உள்ள இரண்டு ஊர் மக்களின் விருப்பம்.. இந்தப்படம் எடுத்து முடிக்கவும், அங்கே பாலம் கட்டி முடிக்கவும் சரியாக இருந்ததாம்..
போஸ்ட் புரொடக்சன் மற்றும் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தப்படம் வரும் செப்டம்பரில் திரைக்கு வர இருக்கிறது.
—
Thanks & Regards
KSK Selva | PRO | KSK MEDIA | M 9790987181
| 189 Sayee Nagar 8th street | Virugambakkam | Chennai 600092 | Tamilnadu | India
PR | EVENTS | SOCIAL MEDIA | ARTIST MANAGEMENT | WEB DEVELOPMENT
5 Attachments