‘ஜெயம்’ படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் வரும் வரும் என்று வாசலைத் திறந்து வைத்திருந்தும் வந்தபாடில்லை! நடிகை சதாவைத்தான் சொல்றோம். இப்பத்தான் ‘டார்ச் லைட் ‘படம் வழியாக வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
“வயசு 34 ஆகுது, இந்த படத்திலும் விலைமகள் வேஷம். பேசாமல் கல்யாணம் பண்ணிக்கலாமே ?” என்றால் “அட விடுங்க.கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது ?”என்கிற சதா காரணத்தையும் சொன்னார்.
“எனக்கு ஏத்த மாதிரி, நான் விரும்புற மாதிரி மாப்ள கிடைக்கலியே! கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கலாம்” என்கிறார்.
நாட்டில எத்தனையோ அலையன்ஸ் செண்டர் இருக்கு! ட்ரை பண்ணலியா?