“சினிமாவில் பிரச்னை வர்ற போதெல்லாம் என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க. கொஞ்சமாவது மனசாட்சிக்கு மதிப்புக் கொடுத்து எழுதுங்க” என்று கடுமையாக சாடி இருக்கிறார் நடிகை நமீதா.
கேரளத்தில் பேமஸ்.
நடிகர் திலீப்புடன் தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு நடிகை கேரளத்தில் காரில் பாலியல் ரீதியாக தொல்லை படுத்தியதாக கூறப்படுகிற வழக்கில் இவரையும் சில மீடியாக்கள் இணைத்துக் குற்றம் சாட்டி இருந்தன.
” நன்றாக புலனாய்வு செய்து எழுதுங்கள். கற்பனையில் கதை எழுதாதீர்கள் ” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். “கல்யாணம் நடந்தால் அதற்குப் பின்னர் நடிக்கமாட்டேன். ஆனால் உடனடியாக கல்யாணம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.அதுக்கு மூணு வருஷம் ஆகும். என்னுடைய புருஷனை நான் கவனித்துக் கொள்ளும் கடமை எனக்கு இருக்கு! ( அடடே! ) எனக்கு குடும்பம்தான் பெரிசு! அதனாலதான் நடிப்பதற்கு விரும்பலேன்னு சொன்னேன்” என்கிறார்.