அக்.2 தேசத் தந்தை காந்திஜியின் பிறந்த நாள்!
இந்திய திருநாட்டுக்கே பெருமையான நாள். அமைதி வழியில் போராடினாலும் ரத்தம் சிந்தி விடுதலை வாங்கித் தந்த தந்தையின் பிறந்த நாள்.
அந்த திருநாளில் விழா எடுப்பது பெருமைக்குரியது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் டீசர் அந்த நாளில்தான் வெளியிடப்போகிறார்களாம். மகிழ்ச்சி.!
அதே நாளில் தளபதி விஜய்யின் ‘சர்க்கார் ‘படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடத்துகிறார்கள். சந்தோசம்.!
ரஜினி, விஜய் இருவருமே தமிழகத்தின் தவிர்க்க இயலாத நடிகர்கள். ஒருவர் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஜாதகம் எல்லாம் பார்த்து வைத்திருக்கிறார். அவருடைய மேலிடம் என்று உத்தரவு பிறப்பிக்குமோ அன்று பெயர் வைத்து விடுவார் .அவர் சூப்பர் ஸ்டார்.
மற்றவர் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற உந்துதலில் இருப்பவர். அவரது ரசிகர்கள் எதற்கும் தயாராக இருக்கக்கூடிய ராணுவமாக இருக்கிறார்கள்.அவர்களுக்கும் தங்களின் தளபதி விஜய் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆக வேண்டும் என்கிற தணியாத தாகத்துடன் இருக்கிறார்கள்.
ஆக இரண்டு முரட்டுக் கிடாக்கள் ஒரே தளத்தில்! சற்றே பிடி தளர்ந்தாலும் ஆபத்துதான்!
வாழ்த்திப் பேசுவதற்கு முன்னணி நடிகர்கள் பெருமளவில் வருவார்கள். காரணம் சன் தொலைக்காட்சி.
கரகோஷம்,வாழ்த்தொலி, இவைகளுடன் கட்டாயம் ‘கேட் கால்ஸ்’ எனப்படும் நையாண்டி த்தனமும் இருக்கலாம்.ஆக மோதல் வரக்கூடிய வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. என்ன செய்யப்போகிறார்கள் சூப்பரும் தளபதியும்,!