நம்பிக்கையுடன் உயிருக்கு போராடி வரும் நடிகை சோனாலி பெந்த்ரே இறந்து விட்டதாக சொல்லி அனுதாபச்செய்தி வெளியிட்டிருக்கிறார் ராம் கதம். இவர் பாஜகவின் எம்.எல்.ஏ,
கடுமையான கேன்சரினால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருபவர் சோனாலி. அவர் மிகவும் நம்பிக்கையுடன் சிகிச்சை பெற்று வருகிறார் மனிஷா கொய்ராலா மாதிரி காப்பாற்றப்படுவோம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்,
அத்தகையவரைத்தான் தனது கொப்பளிக்கும் அறிவு வழியாக “சோனாலி அமெரிக்காவில் இறந்துபோனார். அனுதாபங்கள்” என செய்தி அனுப்பியிருக்கிறார்.
இந்த அதி புத்திசாலியான எம்.எல். ஏ. தான்” பெண்களை கடத்தி வந்து “ஒப்படைப்பதாக காதலர்களுக்கு தைரியம் சொன்ன அறிவாளி.!
நாடு உருப்படுமா!