முதல் வரிசை நடிகர்களைத் தவிர அடுத்து வருகிற எல்லா வரிசை நடிக நடிகையரிடம் இருக்கிற செல்லா செக்குகளை வாங்கி கணக்குப் போட்டால் பல கோடிகளைத் தாண்டி விடும்.
சினிமா உலகில் இதெல்லாம் சாதாரணம் அய்யா!
அதர்வாவுடன் ஜோடி சேர்ந்த படம் 100. போலீஸ் அதிகாரியாக அதர்வா நடிக்க ஜோடியாகிப் போனார் ஹன்சிகா. படத்தயாரிப்பாளர் அரசியல்வாதி. மகேஷ் கோவிந்தராஜ்.
ஹன்சிகா, சம்பளம் 75 லட்சம் பேசப்பட்டு 35 லட்சம் முன்பணமாக வாங்கிவிட்டாராம். பாதிப் படம் முடிந்து விட்டது.
“மீதிப் பணத்தை கொடுங்க!”
“நாற்பது லட்சத்துக்கு 5 செக் !வச்சுக்க”!
பாசத்துடன் அஞ்சு செக்கும் திரும்பி வரவே தயாரிப்பாளரிடம் முறையிட்டாராம் ஹன்சிகா.
என்ன நடந்ததோ அந்த கடவுக்குத்தான் தெரியும்.
“முகத்தில ஆசிட் அடிப்பேன்” என்று மிரட்டியதாக புகார்.நடிகர் சங்கத்தில் புகார் ஆகி இருப்பதாகச் சொல்கிறார்கள் .