சன் பிலிம்சின் சர்க்கார் படத்தில் அரசியல் அதிகம் இருக்கிறது என்பது இண்டஸ்ட்ரி புலிகளுடைய ஆருடம்.!
இதற்கு ஆதாரமாக சில காட்சிகளும் வெளியே கசிந்திருந்தன. படத்தில் அரசியல் தலைவராக ராதா ரவியும் ஓர் ஆள் என்பது ஊர் அறிந்திருக்கும் உண்மை. படம் வெளிவந்த பின்னர்தான் அதுவும் தெரியும்!
தற்போது ராதாரவியே ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார். “அரசியலுக்குள் நுழைய விஜய் ரகசியமாக திட்டமிடுவது நன்றாகத் தெரிகிறது. அரசியல் வாழ்க்கையில் எப்படி யெல்லாம் கையாளவேண்டும் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். ஒரு தலைவராக மக்களை எப்படி வழி நடத்த வேண்டும் என்பதையும் அவர் கற்று வைத்திருக்கிறார்” என்கிறார் ராதாரவி.!