தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக கவிஞர் வைரமுத்துவின் இளையமகன் கபிலன்வைரமுத்து எழுதி டி.ராஜேந்தர் பாடிய, ஏந்திரு அஞ்சலி ஏந்திரு என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதற்கு பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். மறைந்த தலைவர்களுக்கு இளைய தலைமுறை அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தப் பாடலை கபிலன்வைரமுத்து காட்சிப்படுத்தியிருக்கிறார்.