ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப் பூச்சி போதும்னு கிராமங்களில் சொல்வாங்க. அத மாதிரி ஒருத்தனை ஒழிக்கிறதுக்கு ஒரு பொய்யை மட்டும் அவுத்து விட்டாப்போதும்டா சாமி !
யோகிபாபு மார்க்கெட்டு ஸ்மூத்தா போயிக்கிட்டிருக்கு. அவர் செவனேன்னு பொழப்பை பார்த்துக் கிட்டிருந்தாலும் ஊடால இருக்கிறவய்ங்க சும்மா கெடப்பாய்ங்களா? சுழி சும்மா இருக்கவிடாதுல்ல!
சாம் ஆண்டன் டைரக்சன்ல ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ படத்துக்கு யோகிபாபுதான் ஹீரோ ன்னு ஒரு சேதி.! மெய்யாலுமா பாபு.
இத கேட்டதுமே மனுஷன் துடிச்சிப் போனாரு.
“தப்பான சேதிய சில நல்லவங்க வேணும்னே பரப்பிவிட்டிருக்காணுங்க.அந்த படத்துல ஒரு ஃபாரினரும் நாயும்தான் மெயின். நமக்கு வழக்கம்போல காமடி. ஹீரோவா நடிக்கனுங்கிற ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது.வழக்கம்போல காமடிதான் பண்ணுவேன்.” என்கிறார்.