மணிரத்னம், சந்தோஷ் சிவன் இருவருமே திறமைசாலிகள். இந்திய அளவில் புகழ் பெற்றிருப்பவர்கள். இவர்களது படம் என்றால் நட்சத்திரங்கள் முன்னுரிமை கொடுப்பார்கள்.
கருத்து மோதல்கள் ,சமரசங்கள் அறிவாளிகளுக்கு இடையில் நிகழ்வதுதான்!
பொதுவாக மணிரத்னம் படங்களில் நடிக்க விரும்புகிறவர்கள் சம்பளத்தை பெரிதாகக் கருதுவதில்லை. அவரது இயக்கத்தில் நடித்தாலே போதும் என நினைப்பவர்கள்தான்.
செக்கச்சிவந்த வானத்தில் நடிப்பவர்களின் நினைப்பும் அதுவாகத்தான் இருக்க முடியும். சிம்புவின் மீது படர்ந்திருந்த பனி விலகியதுக்கு செ.சி.வானம் ,அதன் இயக்குநரின் பாராட்டு என்பது காரணமாக இருக்கக்கூடும். தன் மீது ‘சொல்லப்பட்ட ‘ குறைகளை அகற்றுவதற்கு வானம் படம் பெரிதும் உதவியது இந்தப்படம் லைகாவுக்கு முதல் காப்பி என்கிற அடிப்படையில் மணிரத்னம் ஒப்பந்தம் செய்திருப்பதாக சொல்கிறார்கள்..
மணிரத்னத்தின் படங்களில் நடிப்பவர்கள் மற்ற படங்களை விட குறைவான ஊதியமே பெறுவார்கள் என்கிற பேச்சு நெடுங்காலமாக இருக்கிறது.
நடிகர்களைப் போல திரைக்குப் பின்னால் கடும் உழைப்பைச் சிந்துகிற டெக்னிஷியன்கள் இந்திய அளவில் பெரும் ஊதியம் பெறுகிறவர்கள்.
அவர்கள் மணிரத்னம் படத்தில் பணியாற்றித்தான் விருதோ பணமோ கிடைக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லாதவர்கள்.. ஆக மணிரத்னத்துக்கும் அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுக்கும் சம்பள விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம் என நம்புவதற்கு இடம் இருக்கிறது.
எதிர்வரும் காலங்களில் இருவரும் இணைந்து பணியாற்றுவார்களா என்பதை வைத்து அந்த நாய்க் கருத்துப் படம் பற்றி தெரிந்து கொள்ளலாம். அந்த நாய்ப் படத்தில் டெக்னிஷியன்கள் பற்றி குறிப்பிடும் போது தனித்த ஒரு தயாரிப்பாளர் என்பதாகவே இருக்கும். ஆனால் நடிகைகள் என்கிற போது ‘பல’தயாரிப்பாளர்கள் என்கிற பன்மை வெளிப்படும்.
ஆக தனித்த ஒரு தயாரிப்பாளர்தான் அவரது இலக்கு என்பதை உணரலாம். யாராலோ சந்தோஷ்சிவனும் டெக்னிஷியன்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .
சந்தோஷ்சிவன் தைரியமாக சொல்லலாம்.!