தளபதி விஜய் மன்றத்தின் பிரபலமான புள்ளி வீட்டுக் கல்யாணம்.பாண்டிச்சேரியில் பெரிய ஆள். போகாமல் இருக்க முடியுமா? தளபதி விஜய் தனது மனைவியுடன் புறப்பட்டுச் சென்றார்.
மிகப்பெரிய நடிகர், அரசியலுக்கு வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிற தலைவர். அவர் வருகிறார் என்றால் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்திருக்க வேண்டும்.?முன்னேற்பாடுகள் சரியில்லை என்கிறார்கள்.
விஜய்யுடன் கை குலுக்க வேண்டும் அருகில் சென்று பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் அலை அடிக்க நெருக்கடி நிலை ஏற்பட்டுவிட்டது.ஒருவர்க்கு ஒருவர் தள்ளுமுள்ளு ! நாற்காலிகள் பறந்தன .கட்டுப்பாடு இழந்ததைப் பார்த்த விஜய் தனது மனைவி சங்கீதாவை அழைத்துக் கொண்டு தப்பி வரவேண்டியதாயிற்று.
தவிர்க்க முடியாத ரசிகர் மன்றப் பிரமுகர் வீட்டுக் கல்யாணம் என்றால் கல்யாணம் முடிந்தபின்னர் அந்த தம்பதிகளை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து வாழ்த்துகளை சொல்லலாமே!
யோசியுங்கள்!