“எப்ப சாப்பாடு போடப் போறீங்க?”
பிக்பாஸ் 1 சுஜா வருணியிடம் போன சீசனிலேயே கமல் கேட்டிருந்தார்.
‘சொல்றன் சார்’ என்று அப்பவே பதில் சொல்லியிருந்தார் சுஜா.
மறுபடியும் நினைவூட்டினார் உலகநாயகன் ‘எப்ப போடப்போறீங்க.?’
“நவம்பரில் சார்!”
நவம்பரில் அப்படி என்ன நடக்கபோகுது?
நடிகை ஸ்ரீ பிரியாவின் சொந்த சகோதரியின் மகன்தான் சிவகுமார். இவரைத்தான் பல வருடங்களாக காதலித்து வந்தார் சுஜா வருணி. இவர்களின் திருமணம்தான் நவம்பரில் நடக்க இருக்கிறது. இதைத்தான் சுஜா மறைமுகமாகச்சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.
நல்லதே நடக்கட்டும். அப்படியானால் கல்யாணம் கமல்ஹாசன் தலைமையில் நடக்கலாம். ஸ்ரீ பிரியா கட்சி பிரமுகர் ஆச்சே!