முந்தானை விலகி நடிப்பவரெல்லாம் தப்பான ஆட்கள் என கணக்குப் போட்டு நைஸ் பண்ணப் பார்க்கிற போதுதான் கட்டையால் மண்டையில் அடி விழும். கபாலியில் ராதிகா ஆப்தேயை கவர்ச்சியாகக் காட்டி இருக்கமாட்டார்கள். ஆனால் இந்திப் படங்களில் செம கவர்ச்சி. அதை நினைத்துக் கொண்டு ஒரு பெரிய நடிகர் ‘மசாஜ் ‘பண்ணி விடவா எனக் கேட்டிருக்கிறார்.
மைக் ஓவர் டு ராதிகா ஆப்தே!
” எனக்கு முதுகு வலி. கடுமையான வலியால் கஷ்டப்பட்டு அன்னிக்கி நடிச்சேன். ஷூட் முடிஞ்சதும் ரூமுக்குப் போறதுக்காக லிப்ட்டுக்கு போனேன். எனக்கு ஜோடியா நடிச்சவரும் வந்தார். நான் ஒன்னும் பேசிக்கல. அவர்தான் மிட் நைட்ல முதுகு மசாஜ் பண்ண வரவான்னு கேட்டார்.
மறுநாள் அந்த ஹீரோவுக்கு வேண்டியவர்களிடம் கடுமையுடன் பேசி அந்தாள் என்கிட்டே மன்னிப்பு கேட்கணும். இல்லாட்டி நடக்கிறதே வேற,என்பதாக எச்சரித்தேன். அவங்களும் அவரை ஃபோர்ஸ் பண்ணி என்னிடம் மன்னிப்பு கேட்க வைத்தனர். பாலியல் தொல்லைக்கு எதிராக நடிகைகளின் குரல் இன்னும் சத்தமாக ஒலிக்கணும்”
இதை யாராவது ஸ்ரீ ரெட்டி காதுல போட்றாதிங்க சார்!