மு.க. ஸ்டாலினின் ரகசிய ஏஜண்டுகள்.!

இன்றைய அரசியலின்  பரபரப்பு செய்தியே  ஸ்டாலினின்  ரகசிய ஏஜண்டுகள் பற்றிதான்.

அதிமுக  அமைச்சர்கள் ,அதிகாரிகள் ,லஞ்ச  ஊழல் பற்றி கடுமையாக  விமர்சித்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.

இவரது அரசியல் ஆவேசத்தை திசை திருப்பும் உத்தியாகவே எச் ராசாவை களம் இறக்கி இருக்கிறது பிஜேபி.என்கிறார்கள்.

நாளைய தனது அரசியல் கூட்டணிக் கட்சியாகப் போகிற அதிமுகவை காப்பாற்றுவதற்காக அரசியல் ரீதியாகவும் அரசு வழியாகவும் பிஜேபி தனது வேளையில் இறங்கி இருக்கிறது என்று நம்பப்படுகிறது.

இன்றைய அரசியல் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதுதான் இன்றைய  டிரெண்டிங் ஆகி இருக்கிறது.

“லோக் ஆயுக்தா கொண்டு வரவேண்டும் என்று போராடினோம்.லோக் ஆயுக்தா வந்தது. ஆனால் செயல் படுகிறதா? அதன் தலைமை யார்?

அந்த அமைப்பு செயல்படுமேயானால் விசாரணை நடத்துமேயானால் முதலில் சிறைக்குப் போவது ஓ.பி.எஸ்.சும் ,இ.பி.எஸ்.சும்தான்.

இவர்களின் ஆட்சியில் லஞ்சம் தாண்டவமாடுகிறது.சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.ஒரு பெண் போலீஸ்  பெரிய அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. அதிமுக அமைச்சர்கள் இன்னும் வீடு புகுந்து திருடவில்லை. இவர்களுக்கு உதவியாக இருக்கிற  ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் .மற்றும் சில அதிகாரிகளைப் பற்றி ரகசியமாக விசாரணை செய்து கொண்டு  இருக்கிறோம்.நாங்கள் ஆட்சிக்கு வந்ததும்  கரன்சியை எண்ணியவர்கள் கம்பியை என்ன வேண்டியது வரும்” என்று சொல்லி இருக்கிறார்.

திமுக நடத்தி வரும் ரகசிய விசாரணையில் முன்னாள் உளவுத் துறை அதிகாரிகள் சிலர் இருப்பதாக சொல்கிறார்கள்.