சிறுத்தை சிவா, அஜித் கூட்டணி நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’படத்துக்காக இணைந்துள்ளது.இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது.தற்போது ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில், திலீப் சுப்பராயன் அஜித்துடன் பாலிவுட் நடிகர் ராஜா அவ்னா மோதும் பயங்கர சண்டைக்காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.இந்நிலையில், இந்த காட்சிகளை யாரோ மிக ரகசியாக படம் பிடித்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இப் படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.