பச்சை இலையையே பத்த வச்சு எண்ணெய் எடுக்கிறவங்க நம்ம சினிமா ஆளுங்க.
மடியில் குழவிக்கல்லை மறைச்சு வச்சுக்கிட்டு தொப்பைன்னு சொல்வாங்க….அப்படித்தான் விம்மி என்கிற வெளிநாட்டுப் பெண்ணோடு கும்மி அடிச்சதாக வந்திருக்கிற படமெல்லாம் டம்மி என்கிறார் விஜய தேவரகண்டா.
ஆந்திராவின் வளர்ந்து வருகிற சூப்பர் ஸ்டார். இவரது படம் பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி இரண்டும் பாக்ஸ் ஆபிசில் வாரிக் கொட்டின. இவருக்கு விம்மி என்கிற வெள்ளைக்காரப் பொண்ணு லவ்வர். நிச்சயம் கூட ரகசியமாக நடந்திருக்கு என சொல்லி சில செல்பிகளை விட்டிருக்கிறார்கள்.
இதை ராம்சரண் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உண்மையா, கைச்சரக்கா என கேட்டிருக்கிறார். தேவரகண்டாவும் கிண்டலாக “என்னோட பிள்ளைக ரம்மியும் டம்மியும் அம்மா விம்மி எங்கேன்னு கேட்கிறாங்க.?” என பதிவிட்டிருக்கிறார்
. படங்களில் முத்தம் கொடுக்கிறது தப்பில்லேன்னு சொல்கிறவர்தான் தேவரகண்டா.
உண்மையா பொய்யான்னு தெரியல.