தலைவாழையிலை விருந்து இல்லேன்னா தட்டுல சாப்பிட்டுப் போறோம் என்கிற கதையாக தேவரகொண்டாவை தூக்கி வைத்து ஆடுகிறது ஊடகங்கள்.! அவர் வெள்ளைக்காரப் பெண்ணுடன் இருக்கிற படங்கள் இரண்டு நாளாக வைரலாக சுற்றி வருகிறது.
அந்த பெண்ணின் பெயர் வர்ஜீனி. ஹைதராபாத்தில்தான் குடும்பத்துடன் இருக்கிறார். எஸ்.டி.ஐ. மீடியாஸ் என்கிற நிர்வாகத்தில் புரொடக்சன் நிர்வாகி. தெலுங்கு மற்றும் வெளிநாட்டுப் படங்களுக்கான டப்பிங் தொடர்பான விஷயங்களை வர்ஜீனி கவனித்துக் கொள்கிறார். படத்தில் அவரது அம்மாவும் தேவரகொண்டாவும்.!
தன்னை ‘வெள்ளை ஹைதராபாத்காரி’ என பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் இவரை தேவரகொண்டா பேமிலிக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. ‘கின்னி’ என செல்லமாக அழைக்கிறார்கள்.
பவன் கல்யாண் ருசிய நாட்டுப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்திருக்கிறார்.
கின்னி -தேவரகொண்டா கல்யாணம் நடந்தால் டோலிவுட்டுக்கு இரண்டாவது வெள்ளைக்கார மருமகள்.