ட்ரிடென்ட் -ராஜ்கமல் இணைந்து தயாரிக்கும் ஹாரர் மூவி வெளிநாட்டுத் தழுவலா.சுயம்புவா….?
சீயான் விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் அக்சரா ஹாசனுக்கு முக்கிய வேடமாம். இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா கதையை பற்றிய விவரங்களை சொல்ல மறுக்கிறார். ஆனால் அவர்கள் ரகசியமாக ஒருவருக்கு மட்டும் தகவல் தந்து விடுவார்கள்.
அவர் வழியாக வந்த செய்திதான் அமெரிக்கன் ஹாரர் மூவியான ‘டோன்ட் பிரீத்’ படத்தைத் தான் தழுவுகிறார்கள் என்பது.! ஒருவேளை இதுவே கிளப்பல் செய்தியாக இருந்தாலும் ஏதோ ஒரு வெளிநாட்டுப் படத் தழுவலுக்குத்தான் ஜிப்ரான் ட்யூன் போடப்போகிறார் என்பது மட்டும் உண்மை.