நண்பர்களா இருந்தால் காதல்னு சொல்வீங்களா?

நடிகர் வினய்க்கு 39 வது பிறந்தநாள்.
நடிகர்கள்னா உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். நண்பர்களை அழைப்பார்கள். கேலி பண்ணிக் கொள்வார்கள்.அப்படித்தான் கொண்டாடினாராம் வினய். இந்த வருடம் நடிகை விமலாராமன் படத்தை தனது படத்துடன் இணைத்து எக்ஸ்டிராவாக ஒரு இதயம் படத்தையும் போட்டு விட்டார்.
“ஏப்பு…..இப்படி போட்டா லவ்வுன்னு சொல்வாய்ங்களே.. நெசமா?”
“ஒன்பது வருஷமா நானும் விமலாவும் நல்ல நண்பர்கள். இதைத் தாண்டி என்ன இருக்கிறது?” என்கிறார் வினய்.
“”நானும் வினய்யும் சேர்ந்து நடிச்சிருக்கிறோம். நல்ல நண்பர்களா இருந்து வர்றோம். ஒருத்தருக்கு பிறந்தநாள்னா வாழ்த்துறது இல்லையா..ஒன்பது வருஷ பிரண்ட்ஷிப் !இதை மீறி என்ன இருக்க முடியும்?” என்கிறார் விமலாராமன்.
வாழ்த்துகள் நட்பு நீடிக்கட்டும்.