சிறந்த நடிகர்களை ஆண்டு தோறும் தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது ஐ ஏ ஆர் ஏ என்கிற லண்டன் அமைப்பு. 2018 ம் ஆண்டுக்காக மெர்சல் படத்தில் நடித்திருந்த தளபதி விஜய்யை நாமினேட் செய்திருந்தது. பல நாடுகளில் இருந்தும் நடிகர்கள் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதற்கான வாக்கெடுப்பு நேற்று முடிவடைந்தது.
இன்டர்நேஷனல் சிறந்த நடிகராக ‘மெர்சல்’ விஜய் தேர்வு செய்யபட்டிருக்கிறார். இந்த அமைப்பிலிருந்து விருது பெறுகிற முதல் தமிழர் விஜய்தான். தமிழராக பெருமைப்படக்கூடிய விஷயம். இதற்கான பாராட்டு விழாவோ,நன்றி அறிவிப்பு விழாவோ விஜய் ரசிகர்கள் சார்பில் நடத்தப்படுவதாக தெரியவில்லை. அண்மையில் பாண்டிச்சேரியில் நடந்த கல்யாண நிகழ்ச்சியில் விஜய்,அவரது மனைவி சங்கீதா இருவரும் பெருங் கூட்டத்திலிருந்து மீண்டு வருவதற்குள் பட்ட பாடு,கையில் கீறல் ,காலில் சுளுக்கு .என்கிற பரிசுகளுடன் வரவேண்டியதாயிற்று. ஆனால் திரை உலக சங்கங்கள் என்ன செய்யப்போகின்றன என்பது தெரியவில்லை.