தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான‘அர்ஜுன் ரெட்டி’,அங்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, வசூலில் சாதனை செய்தது. இப்படமே, தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில், சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.மேகா என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார்.‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். இந்நிலையில் ,துருவ் விக்ரமுக்கு இன்று (செப்.23) பிறந்த நாள் என்பதால், இதன் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. டிசம்பரில் வர்மா படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.