பக்கவாத்தியங்கள் இல்லாமல் வருகிற ஒரே ஆள் இயக்குநர் பாலாதான்!
அவர் இயக்கியிருக்கிற ‘வர்மா’ படத்தின் நாயகன் துருவ் பிறந்த நாள் விழாவும் ,அந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடந்தது.
“அப்பாவுக்கு ‘சேது’ படம் மூலம் உயிர் கொடுத்தார் பாலா மாமா. எனக்கு வர்மா படம் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்” என்று துருவ் சொன்னபோது அருகில் நின்றிருந்த அப்பா விக்ரம் நெஞ்சு நிமிர்த்திக் கொண்டார்.
வர்மாவுக்கு துருவ் தேர்வானது எப்படியாம்?
தம்பிக்கு டப்ஸ்மாஷ் பண்ணுவது பழக்கம். இதை பார்த்த தயாரிப்பாளர் வர்மாவுக்கு தம்பியை விட வேற ஆள் கதைக்கு பொருந்த மாட்டார்கள் என்று இயக்குநர் பாலாவிடம் சொல்லி விட்டார்.
பாலா ரீமேக் படங்கள் பண்ணுவதில்லை. விக்ரம் பையனுக்காக இயக்கிய வர்மா முழுப்படமும் இப்போது தயார்.
“ரொமான்ஸ் ‘சீன்லாம் எப்படி வந்திருக்கு ?”
பாலா அவர் பாணியிலேயே சொன்ன பதில்.
“அழகான காதலியிடம் எப்படி ரொமான்ஸ் செய்யணும் என்பதை சீரியசாகவே சொல்லிக் கொடுத்தேன். சேது எடுக்கும்போது துருவ் ஆறு மாதக் குழந்தை.பொம்மையை வச்சு விளையாடிட்டிருப்பான்.அப்பவே ஆம்பளை சிங்கம் எது பொம்பளை சிங்கம் எதுங்கிறது தெரியும்.!தம்பி படு ஷார்ப். அவனை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுறேன்.” என்றார் பாலா.
இனி பாலாவுடன் நம்ம தனி டிராக்.
“அப்ப பார்த்த பாலாவா அப்படியே ஒல்லியா சதைப் பிடிக்காம இருக்கிங்களே என்ன காரணம் பாலா?”
“அரிசிச்சாதம் சாப்பிடுறது பெரும்பாலும் இல்ல. வறுமைப்பட்ட காலத்தில் பசியோடு இருந்துவிட்டதால் குடல் சுருங்கிப் போச்சுது. இப்ப ஒரு சப்பாத்தி ஒருவேளைக்கு போதும். நான் -வெஜ் அயிட்டம்ஸ் தொடுவதில்லை.”!