லிங்குசாமி இயக்கத்தில் வளர்க்கப்பட்ட சண்டக் கோழி 2 இன்று சிலிர்த்துக் கொண்டு பாடப் போகிறது. இதற்காக படத்தின் நாயகன் விஷால் பிரமாண்டமான வேலைகள் செய்திருக்கிறார்.
விழாவின் மைய நாயகர்கள் ஷங்கர், மோகன்லால் என சொல்லப்படுகிறது.
இன்னொன்றும் கேள்விப்பட்டோம். இதுவரை விஷாலுடன் 25 படங்களிலும் ஜோடியாக நடித்த நாயகிகளையும், இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் என அனைவரையும் அழைக்கப் போகிறாராம். இன்றைய இசை வெளியீட்டு விழாவில் ராஜ்கிரண்,கீர்த்தி சுரேஷ் யுவன்சங்கர்ராஜா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.