கல்யாணத்துக்காக மண்டப வேலைகள், விருந்து, வரவேற்புகள் என எல்லா வேலைகளும் முடிந்து வடசென்னை படம் மண மேடை ஏறும் நேரத்தில் இயக்குநர் வெற்றி மாறன் வந்து மணமகன் தனுஷிடம் “இன்னும் தாலி வாங்கல, வெயிட் பண்ணுங்க!” எனச் சொன்னால் எப்படி இருக்கும்?
வடசென்னை படத்தைப் பற்றிய தயாரிப்பு அறிவிப்பு வந்த பிறகு தனுஷ் 3 படங்களில் நடித்து விட்டார்.நான்காவதாக அவரின் இயக்கத்தில் ஒரு படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. வடசென்னை முடிந்து விட்டது என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கையில் இயக்குநர் வெற்றிமாறன் நெல்லைக்கு சென்று “வடசென்னைக்கு இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் நடத்த வேண்டியதிருக்கு ,கால்ஷீட் கொடுங்கள்” என்று தனுஷிடம் கேட்டால் எப்படி இருக்கும்?
மனிதருக்கு செம கோபமாம். தனுஷ் மறுத்து விட்டாராம். இயக்குநர் வெற்றி மாறன் மன்றாடி கால்ஷீட் வாங்கி படத்தை முடித்திருக்கிறார்.
அட..இப்படியெல்லாம் நடக்குமா?