“அரசியல் வாதிகள் சேவை செய்ய வேண்டியதில்லை.வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்தாலே போதும்.ஆனால் 300 கோடி பறிமுதல். கோடிக்கணக்கில் ஊழல்னு வர்ற செய்தியெல்லாம் அதிர்ச்சியா இருக்கு. ‘பொறுத்தது போதும்’என்பதுதான் இன்றைய கால கட்டம் ” என்கிறார் நடிகர் விஷால். ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.
“என் மக்கள் நல இயக்கத்தை நிச்சயமா கட்சியா மாத்துவேன். அரசியல்வாதிகள் அவங்க வேலையை சரியா செஞ்சாங்கன்னா என்னை மாதிரி நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர்றாங்க.பவர்ல இருந்தாதான் சரியா பண்ண முடியும்னா அரசியலுக்கு வர்றது தவறே இல்ல.
திருப்பரங்குன்றத்துல இவங்க இடைத் தேர்தல் அறிவிப்பாங்களா, மாட்டாங்களா என்பதே தெரியல. இன்னும் உள்ளாட்சித் தேர்தலையே நடத்தலியே! இடைத்தேர்தல் அறிவிச்சாங்கன்னா அங்க நிக்கிறது பத்தி பார்க்கலாம்”என்கிறார் விஷால்.