பொதுவாக புருஷன் பொண்டாட்டி சந்தோஷமாக இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தோசம். மகிழ்ச்சி. சிலருக்கு வருத்தமாக இருக்கலாம். அனேகமாக அந்த கல்யாணத்தில் அவர்களுக்கு கிடைக்கவேண்டியது கிடக்காமல் போயிருக்கலாம்.
ஆனால் நாக சைதன்யா–சமந்தா கல்யாணத்தில் எல்லோருக்குமே சந்தோஷம்தான்.!
தெலுங்கு அப்பா, மலையாளி அம்மாவின் களிப்பூட்டுகிற கலவைதான் சமந்தா. தெலுங்குப் பையன் சைதன்யாவை மணந்து கொண்டு தொடர்ந்து நடிக்கவும் செய்கிறது. கல்யாணம் ஆனதும் குழந்தையைப் பெற்றுக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகிவிடுகிற நடிகைகளுக்கு மத்தியில் சமந்தா சினிமாவில் தொடர்வது கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இருக்கிற புரிதலையே காட்டுகிறது.
வெளிநாடு சென்றிருக்கிற கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிற புகைப்படங்களை சமந்தா வெளியிட்டிருந்தார்.
உடனே குமுறல், பொங்கல் என நெட்டிசன்கள் ஆட்சேபங்களை அள்ளி இறைத்து விட்டார்கள்.
அத்தனை பேருக்கு அம்மணியின் ஒரே பதில்.!
நடுவிரல் அடையாளம்!
சைதன்யா,சமந்தா இணைந்து நடிக்க இருக்கும் மஜ்லி என்கிற படம் அவர்கள் ஹைதராபாத் திரும்பியதும் தொடங்குகிறது.