ரித்விகா–ஐஸ்வரியா இருவரில் ஒருவர்தான் வின்னர் என்றாகி விட்ட இறுதிக்கட்ட நிலையிலும் விஜய் டி.வி.யின் தொழில் தர்மம் பார்வையாளர்களை வெச்சு செய்து விட்டது. வாங்கிய விளம்பரங்களுக்கு முறைவாசல் செய்தாக வேண்டுமே!நள்ளிரவு வரை ஜவ்வாக இழுத்து விட்டார்கள்.
விளம்பரங்களை ஒளி பரப்பி வெறுக்க வைத்து விட்டார்கள்.
ஆனாலும் ஆறுதலாக அமைந்திருந்தது அந்த ஸ்பூப் நிகழ்ச்சிதான். பங்கேற்றிருந்தவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டே நக்கல் அடித்தார்கள். எத்தனை பேர் கடுப்பானார்கள் என்பது அவரவர் உள்ளம்தான் அறியும்!
ஆனாலும் சகோதரிக்காக அந்த நேரத்திலும் நித்யாவுடன் சண்டைக்குத் தயாரானார் பாருங்கள் மும்தாஜின் அண்ணன்! வன்மம் முகத்தில் தெறித்தது. எல்லாம் முடிந்து போன நிலையில் அண்ணனும் தங்கையும் வரிந்து கட்டியது ….
கமலுக்கே பொறுக்கவில்லை. “குழாயடி சண்டையை தவிர்த்திருக்கலாமே”.என புலம்பி விட்டார்.
நாம் தேர்வாக மாட்டோம் என்பது தெரிந்து விட்டதோ என்னவோ …அடாவடி ஐஸ்வர்யாவாக கண்களில் நெருப்பைக் காட்டிவந்தவர் அன்று கண்கள் கலங்கப் பதில் சொன்னது பரிதாபமாகத்தான் இருந்தது. கண்ணீர்த்துளிகள் அவரையும் மீறி வந்து விடுமோ என்பது குளோசப்களில் தெளிவாகத் தெரிந்தது.
பிக்பாஸ் 1 முடிந்ததும் சிலர் வெளியில் வந்து புலம்பிய நிகழ்வுகள் உண்டு. அதைப் போல் இவர்களில் யாராவது புலம்புவார்களா?
ஒரே கூண்டுகள் இத்தனை பேரை வைத்து தனி மனிதன் சர்க்கஸ் காட்டியது சாதாரணமானதல்ல. கமல்ஜி! அரசியலில் வெளுத்துக் கட்டலாம்!