டி.ஆர் .குமுறல்.!”சினிமாக்காரனை விட ஈபிஎஸ்,ஓபிஎஸ் தான் பணக்காரங்க!

“டி ராஜேந்தரின்  பேட்டி முடிஞ்சி  வெளியில் வருவதென்றால்  அது  எரிமலை வயிற்றில் இருந்து  வெளியில்  வர்ற மாதிரி.. ! கரண்டு  லீக்  ஆகிற இடத்தில மட்டும்தான்  ஷாக் அடிக்கும். ஆனா டி.ஆர் ,இருந்தா  அந்த ரூம்  முழுக்க  ஷாக் தான்” என்பது  இந்த பத்திரிகையாளரின்  அனுபவம்..

அன்னிக்கும்  அப்படித்தாங்க. ! 

 “என்ன  நாட்டில லஞ்ச  ஊழல்  இல்லேன்னு  சொல்ல  முடியுமா? விஜய் சொன்ன மாதிரி தலை விரித்து ஆடுது!  பூவும் தலையும் இருந்தாதான்  பணம் செல்லும். தலைமை சரியில்லேன்னா எந்த  ஆட்சியும் செல்லாது.

சினிமாக்காரங்களை  விட  இந்த ஈபிஎஸ், ஓபிஎஸ், ஜெயகுமார், விஜயபாஸ்கர்  இவங்களுக்குத்தான் சொத்து ஜாஸ்தி.

ரெய்டு விட்டு அள்ளிட்டுப் போனாலும் அந்தப் பணம் எங்கே  போகுதுன்னு தெரியல.

அந்த அம்மா வாங்கி வச்ச ஓட்டுத்தான்  இவங்கள என்னென்னமோ  பண்ண வச்சிருக்கு.!   

விஜய்க்கு அதிக மன்றங்கள் இருக்கு. அடுத்து சிம்புவுக்குத்தான்!

உடனே சிம்புவுக்கு இல்லேன்னு சொன்னா சொல்லிட்டுப் போ!

எப்படி மைக் பிடிக்கணும், எப்படிஓட்டு வாங்கனும்கிறத தலைவர்  கலைஞர் சொல்லிக் கொடுத்திருக்கார். தலை இருக்கிறபோது  வாலு ஆடக்கூடாதுன்னுதான்  சும்மா  இருந்தேன். ஆகஸ்ட்  7.ம் தேதியுடன்  அந்த சாப்டர்  ஓவர். இனி புது  சாப்டர் ஆரம்பம்.”

இப்படி படிப்படியாக  சாரம் கட்டினார்   டி.ஆர்.!