கதை ஜெயிக்குமா ஜெயிக்காதா? ரகுல் பிரீத் சிங் சொல்வார்.

ஒவ்வொருத்தன் கோடிக்கணக்கில் கொட்டி அழுது எடுக்கிற படம் ஜெயிக்குமா ஜெயிக்காதா என்பது தெரியாமல் முழி பிதுங்குறான்.  திருப்பதி எழுமலையானிடம் கேட்டு பலன் இல்லாமல் போனவர்கள்  அடுத்து பலூன் கடை மெரினாவிலா, கிண்டி பார்க்கிலா  என்கிற முடிவு தெரியாமல்  அல்லாடிக் கிடக்கிறார்கள். 

ஆனால் தெலுங்கு ஹீரோயின் ரகுல்பிரீத்சிங் ஆருடமே சொல்ல முடியும் என்கிறார். தகுதிக்கேற்ப  ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டால் நல்ல வசூல்  கிடைக்கும்.

“ஒரு படம் வெற்றி பெறுமா பெறாதா என்பது என் கையில் இல்லை.ஆனால் நான் நடித்த கேரக்டருக்கு  பெயர் வருமா வராதா என்பதை சொல்ல முடியும்.” என்கிற ரகுல்பிரீத் இன்னொன்றையும் சொன்னார்.

“ஒருவரிடம் சில நிமிடங்கள் பேசினால் போதும் அவரது அந்தரங்க விஷயங்களை புரிந்து கொள்வேன். அப்படிப்பட்ட எனக்கு கதை வலுவா இருக்கா இல்லையா என்பதை உணர முடியாதா என்ன?”என கேட்கிறார்.