மோகன்லால் பிரதமர். சூர்யா என்.எஸ்.ஜி. அதிகாரி.!

கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் சூர்யா நடிக்கிற படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனால் சூர்யா 37 என்றே தற்காலிகமாக அழைக்கிறார்கள். இந்த படத்தில் சூர்யா என்.எஸ்.ஜி. உயரதிகாரியாக நடிக்கிறார். இதற்காக டெல்லியில் உண்மையான அதிகாரிகளைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். அப்படியானால் இதில் மோகன்லாலுக்கு என்ன வேடம்?
அவர் இந்தியாவின் பிரதமர் .அவருக்கு மிரட்டல் வருகிறது. இதனால் பாதுகாப்பு வளையம் இறுகுகிறது.பிரதமரை பாதுகாக்கும் முயற்சியில் குலுமணாலியில் சண்டை நடக்கிறது இதற்கான காட்சிகளைத்தான் படமாக்கி வருகிறார்கள். இதனால் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை குலுமணாலிக்கு வரவழைத்து இயக்குநர் கே.வி.ஆனந்த் மெட்டு கேட்டு வருகிறார்.