நடிகையை வேட்டை ஆடிய தயாரிப்பாளர்.

அடப்பாவி மனுஷா….நடிகைன்னா இளக்காரமா?

மீ டூ என்கிற ஹாஸ் டாக் வந்ததும் போதும் , அகழ்வாராய்ச்சி நடத்தி ஆதி காலத்து சமாச்சாரங்களை எல்லாம் சந்திக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

11 வருசத்துக்கு முந்திய சம்பவம் சபை ஏறி இருக்கிறது.

ப்ளோரா ஷைனி. ஸ்த்ரி படத்து நடிகை. வயது 34. இப்போதுதான் 11 வருஷத்துக்கு முன்னால் தனக்கு நேர்ந்த கொடூரத்தை சொல்லுகிறார்.தாடையை உடைத்து இருக்கிறார்கள்.

அப்போது சொல்லியிருந்தால் தன்னைக் காணாப் பிணமாக ஆக்கி இருப்பார்கள் என்கிற பயம் இருந்திருக்கிறது.

சவுரங் தோஷி என்பது தயாரிப்பாளரின் பெயர்.
மிருகத்தனமாக தாக்கி இருக்கிறார். எல்லாம் வல்லுறவுக்கு வரவில்லை என்கிற வெறிதான்!
கோர்ட்டுக்கு போய் விட்டார்.வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

“ஒரே ஒரு ஆள்தான் எனக்கு ஆதரவு. ஐஸ்வர்யா பச்சன். தோஷி இண்டஸ்ட்ரியில் பெரிய ஆள் என்பதால் எனக்கு ஆதரவு தர பயந்தார்கள். தற்போதைய நிலமையைப் பார்க்கிற போது சந்தோஷமாக இருக்கிறது. வழக்கு கோர்ட்டில் இருப்பதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை” என்கிறார் ஷைனி.