நடிகைளுக்கு காஜல் கோரிக்கை.”தைரியமுடன் நில்லுங்கள்.!”

போகிற போக்கினைப் பார்த்தால் மெரீனா போராட்டமாக மாறி விடும் போலிருக்கிறது ‘மீ டூ’ இயக்கம் ! போராடுகிற பெண்களுக்கு இன்று ஆதரவாக காஜல் அகர்வால் குரல் கொடுத்திருக்கிறார்.
“தைரியத்தை மட்டும் கை விட்டு விடாதீர்கள். வேலை பார்க்கிற இடங்களில் சில சைத்தான்களை சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது. அத்தகைய பெண்களுக்கு அசாத்திய தைரியம் ,துணிச்சல் வேண்டும். ஒற்றுமையுடன் எதிர்கொள்ளவேண்டும்.வெறும் பப்ளிசிட்டியாக கருதாமல் சேறு வீசாமல் உண்மையுடன் செயல்படவேண்டும்” என்பதாக காஜல் சொல்லியிருக்கிறார்.